தமிழில் ஜனவரி 13, இந்தியில் ஜனவரி 14: மாஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தமிழ் தெலுங்கு பதிப்புகள் ஜனவரி 13ம் தேதியும் இந்திப் பதிப்பு ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகும் என சற்று முன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சரியாக 12.30 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது 

master

அட்டகாசமான தமிழ் தெலுங்கு இந்தி மற்றும் ஆங்கில போஸ்டர்களுடன் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பில் தமிழ் தெலுங்கு மொழியில் ’மாஸ்டர்’ திரைப்படம் தேதி ஜனவரி 13ம் தேதியும் ஹிந்தி மொழியில் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கி இதுகுறித்த ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். இதுநாள் வரை ’மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் இன்று அந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ’மாஸ்டர்’ திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் 


 

From around the web