போட்டோஷூட்டில் பிஸியாக இருக்கும் "ஜானு"!

தனது டுவிட்டர் பக்கத்தை அழகுபடுத்தும்" ஜானு"!
 
"நடிகை கௌரி கிசான்" டுவிட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது அழகிய புகைப்படங்கள்

"மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படுபவர் நடிகர் "விஜய் சேதுபதி". விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய "நானும் ரவுடிதான்"," சேதுபதி" போன்ற படங்கள் இவருக்கு நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தியேட்டர்களில் கூட்டம் நிறைந்துள்ள  படம் "மாஸ்டர்".இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி "தளபதி" விஜய்க்கு வில்லனாக தோன்றி  அசர வைத்து இருப்பார். குறிப்பாக அத்திரைப்படத்தில் அவர் "பவானி" என்ற கதாபாத்திரத்தில் தோன்றி மக்களை தன்வசம் இழுத்துக் கொண்டார்.

gouri kishan

மேலும் இவர் நடிப்பில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்ற திரைப்படம் "96" .இத்திரைப்படத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை திரிஷா நடித்திருந்தார். இத்திரைப்படம் ஒரு மாறுபட்ட காதல் கதையாக அமைந்திருந்தது. இத்திரைப்படத்தில் திரிஷா,  "ஜானு"என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .

திரிஷாவின் "ஜானு" என்ற கதாபாத்திரத்தின் இளம் வயதில் நடிகை "கௌரி ஜி கிசான்" நடித்திருப்பார். இதனால் நடிகை கௌரி ரசிகர்கள் மத்தியில் என்று "ஜானு"அழைக்கப்பட்டு இன்றளவும் "ஜானு" என்றே அழைக்கப்பட்டு வருகிறார். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய "மாஸ்டர்" திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை "கௌரி ஜி கிசான்"  தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோஸை ஷேர் செய்துள்ளார்.அந்த போட்டோவில்  அவர் குட்டி தேவதையாக காட்சி அளிப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவரின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

From around the web