ஓடிடியில் ரிலீஸ் செய்தால் லாபம், ஆனால் ரூ.10 கோடி நஷ்டம்: தனுஷ் பட தயாரிப்பாளருக்கு சிக்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது பெரும்பாலான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது தெரிந்தது. முதலில் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் ஓடிடியில் ரிலீசாகி வந்த நிலையில் தற்போது சூரரைப்போற்று, ஆக்சன் உள்பட பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜகமே தந்திரம் படத்தின் பட்ஜெட்டை விட அதிக
 

ஓடிடியில் ரிலீஸ் செய்தால் லாபம், ஆனால் ரூ.10 கோடி நஷ்டம்: தனுஷ் பட தயாரிப்பாளருக்கு சிக்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது பெரும்பாலான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது தெரிந்தது. முதலில் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் ஓடிடியில் ரிலீசாகி வந்த நிலையில் தற்போது சூரரைப்போற்று, ஆக்சன் உள்பட பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜகமே தந்திரம் படத்தின் பட்ஜெட்டை விட அதிக விலை தருவதாக ஒடிடி நிறுவனம் தெரிவித்துள்ளதால் இந்தப் படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்திற்கு கிடைக்கும் மானியமாக ரூபாய் 10 கோடி ஓடிடியில் ரிலீஸ் செய்தால் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஜகமே தந்திரம் திரைப்படம் இங்கிலாந்து நாட்டில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டுள்ளதால் அந்நாடு இந்த படத்திற்கு ரூபாய் 10 கோடி மானியம் தர முடிவு செய்து உள்ளது ஆனால் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்தால் மட்டுமே மானியம் கிடைக்கும் என்ற நிபந்தனை உள்ளது

இந்த நிலையில் ஓடிடியில் ரிலீஸ் செய்தால் இங்கிலாந்து அரசு கொடுக்கும் 10 கோடி நஷ்டம் ஆகுமே என்ற எண்ணத்தில் தயாரிப்பாளர் தற்போது சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது

From around the web