தனுஷின் ஜகமே தந்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலண்டனில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் திரை அரங்குகள் அல்லது ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின்
 

தனுஷின் ஜகமே தந்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலண்டனில் முடிந்தது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படம் திரை அரங்குகள் அல்லது ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘ரக்கிட ரக்கிட ரக்கிட’ என்ற பாடல் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். அன்றுதான் தனுஷின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷின் பிறந்தநாளின் போது அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக இந்த பாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கேரக்டர்களில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web