விரைவில் முரட்டு சிங்கிள் ஜாக்குலினுக்கு திருமணம்

அப்போது உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஒருவர் கேட்க, அதற்கு ஜாக்லின் விரைவில் என தெரிவித்துள்ளார்.
 

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ரக்ஷ்னுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ஜாக்லின். ஜாக்லின் 1996 ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னையில் மீடியா படிப்பு படித்துள்ளார். 

அவர் பிரபலமடைய முக்கிய காரணமே அவரது வித்தியாசமான குரல் தான். இந்நிலையில் விஜய் டிவியில் வெளியான 'ஆண்டாள் அழகர்' என்ற சீரியலில் அறிமுகமாகி தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பிறகு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்தில், அவருக்கு தங்கையாக படம் முழுவதும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ என்ற என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்துள்ள ஜாக்லின் யாரும் எதிர்பார்க்காத விதமாக "எனக்கு வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

உங்களில் யாராவது நல்ல பண்பான மாப்பிள்ளை இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். மிக்க மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் குஷியாகி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web