கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கமலுக்கு ஆதரவு கொடுங்கள்: பிரபல இயக்குனர் வேண்டுகோள் 

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை தனது நண்பர் கமலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் உண்மையிலேயே தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்பினால் இதனை அவர் செய்ய வேண்டும் என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கோலிசோடா, 10என்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவரும் விஜய் மில்டன் என்பது தெரிந்ததே. இவர் ரஜினியின் அரசியல் திடீர் முடிவு குறித்து தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தைரியமான முடிவு ரஜினிகாந்த் சார். உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

rajini kamal

ஆனால் இந்த டுவிட்டை அவர் சில மணி நேரங்களில் டெலிட் செய்து விட்டதாகவும் தெரிகிற.து ரஜினி தற்போது கட்சி தொடங்குவது இல்லை என்ற முடிவை எடுத்த பின்னர் தனது 40 ஆண்டு கால நண்பர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது வழக்கம்போல் ரசிகர்கள் அவரவர் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று கூறுவாரா? அல்லது வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அமைதியாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web