என்னால தான் அனிதா வெளியே போனாங்க: சரியாக கணித்த ஆரி!

 

ஏற்கனவே எதிர்பார்த்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அனிதா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறியவுடன் அவர் ஏன் வெளியேறினார் என்ற காரணத்தை சரியாக கணித்து ரம்யாவுடன் ஆரி பேசிய காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது 

என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தான் அனிதா வெளியே சென்றார் என்றும் அவர் முதல் வாரத்திலிருந்து எப்படி விளையாட வேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டு விளையாடினார் என்றும் குறிப்பாக அனிதா எந்த நேரத்திலும் தனது தவறுகள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்றும் அப்படியே யாராவது சுட்டிக் காட்டினால் அதை திசை திருப்ப வேண்டும் என்ற கோணத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் என்றும் ஆரி கூறினார் 

anitha

ஆனால் கடந்த திங்கட்கிழமை தன்னிடம் ஏற்பட்ட விவாதம் காரணமாகத்தான் மக்களுக்கு வெறுப்பாகி இருக்கும் என்றும் அதனால்தான் அவர் வெளியேறி இருப்பார் என்று ஆரி சரியாக கணித்து இருந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது

முந்தைய வாரம் வரை அனிதாவுக்கு மக்களின் ஆதரவு குவிந்து இருந்த நிலையில் திடீரென ஆரியிடம் அவர் வாக்குவாதம் செய்து கொண்டதால் தான் அனிதாவுக்கு கடந்த வாரம் மிக குறைவான வாக்குகள் கிடைத்தது என்பதால் அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விஷயம் வெளியே உள்ள அனைவருக்கும் தெரியும் என்றாலும் உள்ளே இருக்கும் ஆரி மிகச் சரியாக கணித்தது அவருடைய புத்திசாலித்தனத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

From around the web