பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மைதான்: ராஜூ சுந்தரம்

 

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதாகவும் இருவரும் தம்பதிகளாக சென்னையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த செய்தி தற்போது உண்மை என்பது பிரபுதேவாவின் சகோதர ராஜசுந்தரம் மூலம் தெரியவந்துள்ளது 

பிரபுதேவாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடுப்பில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து பிசியோதெரபி டாக்டர் ஹிமானி என்பவர் அவரை கவனித்துக் கொண்டதாகவும் அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், இதனை அடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மே மாதம் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும் ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார் 

raju sundharam

பலமுறை பிரபுதேவாவை நாங்கள் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய நிலையில் தற்போது அவர் திருமணம் செய்திருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி என்றும் ராஜூ சுந்தரம் கூறி உள்ளார் ஏற்கனவே பிரபுதேவா, நடிகை நயன்தாராவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்தார் என்பதும் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக காதல் பிரேக் அப் ஆகிவிட்டது என்பதும் தெரிந்ததே

From around the web