அது அன்பானதாகவும் இருக்கலாம், பயமானதாகவும் இருக்கலாம்: புதிர் போடும் சாக்சி அகர்வால்!

 

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாக்ஷி அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் 5 முதல் 10 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார் என்பது தெரிந்ததே 

மேலும் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு கருத்தை அவர் தெரிவிப்பார் என்பதும் அந்த கருத்து சில சமயம் புரிந்தும் புரியாமலும் சில சமயம் குழப்பமாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

மேலும் அவர் பதிவு செய்யும் கருத்தை விட அவரது கவர்ச்சி புகைப்படத்தை தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள் என்பதும் அவரது கவர்ச்சி புகைப்படத்தை தினந்தோறும் பார்க்க அவரது பக்கத்திற்கு ஃபாலோயர்கள் வந்து குவிந்து வருவது உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது 

sakshi

இந்த நிலையில் சற்று முன் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்துள்ள சாக்ஷி அகர்வால் அதில் வழக்கம்போல் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். அதில் எனக்கு சொந்தமான ஒரு கேரக்டர் ஒன்று உள்ளது. அது ஆளுமை மற்றும் அணுகுமுறையுடன் உள்ளது. அந்த கேரக்டர் அன்பானதாகவும் இருக்கலாம், பயமானதாகவும் இருக்கலாம். அது எனக்கு எதிரே யார் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது’ என்று கூறியுள்ளார்

இந்த கருத்து ஃபாலோயர்களுக்கு புரிகிறதோ இல்லையோ அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தை ஆழ்ந்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web