விடிய விடிய நடந்த ஈஷா யோகா சிவராத்திரி...  காஜல் அகர்வால், சமந்தா பங்கேற்பு..

 உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வழக்கமாக நேரில் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி இந்தாண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது.
 
விடிய விடிய நடந்த ஈஷா யோகா சிவராத்திரி... காஜல் அகர்வால், சமந்தா பங்கேற்பு..

ஆண்டுதோறும் கோவையில் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்தாண்டும் மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வழக்கமாக நேரில் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு,  கொரோனா அச்சுறுத்தலால் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடனமாடினார். 

அவர் நடனமாடியபோது முன்னணி நடிகைகளுக் மற்றும் பக்தர்களும் பரவச நடனத்தில் பங்கெடுக்கும் விதமாக நடனமாடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் மறுநாள்(இன்று) காலை 6 மணி வரை  நடந்த இந்த நிகழ்ச்சியைதமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநில முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்தன.

இந்நிகழ்வில் இதில் ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்துக்கொண்ட நடிகை சமந்தாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.  மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட தென்னிந்திய முன்னணி நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு, சமந்தாவின் தோழில் ஷில்பா ரெட்டி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதில் காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்லுவுடன் கலந்துகொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

From around the web