கைவிடப்படுகிறதா விஜய் முருகதாஸ் திரைப்படம்? அதிர்ச்சி தகவல் 

 

விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருந்த ’தளபதி 65’ திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஏஆர் முருகதாஸின் கதை தனக்கு திருப்தி இல்லை என்று விஜய் கூறியதாகவும் கதையை சரி செய்து கொண்டு வந்த பின்னர் இந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு கொள்ளலாம் என விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது மீண்டும் முருகதாஸ் மாற்றிக் கொண்டு வந்த கதையும் விஜய்க்கு பிடிக்கவில்லை என்பதால் இந்த படம் டிராப் ஆகும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே மகிழ்திருமேனி கூறிய கதை தனக்கு ரொம்ப பிடித்து விட்டதால் அந்த கதையை படமாக்கலாம் என்று விஜய் முடிவு செய்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் வதந்தி பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் ‘தளபதி 65’ பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து வெளிவந்த தகவலின்படி விஜய்-முருகதாஸ் இணையும் ‘தளபதி 65’ திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தனர்,

From around the web