நயன்தாரா நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? வைரலாகும் புகைப்படம்!

 
நயன்தாரா நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் கசிந்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை உறுதி செய்வது போல் இன்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ’விரலோடு உயிர் கூட கோர்த்து’ என்று அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து இது நிச்சயம் நிச்சயதார்த்த மோதிரம் ஆகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

nayanthara

இந்த நிச்சயதார்த்த மோதிரம் பிளாட்டினத்தில் இருப்பதால் விலை உயர்ந்ததாக இருக்கும் என்றும் நயன்தாராவுக்கு விக்னேஷ் தான் இந்த மோதிரத்தை அணிவித்ததாகவும் திரையுலகினர் கூறிவருகின்றனர்

இதனை அடுத்து விரைவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

From around the web