கமல் கட்சியில் சேர போகின்றாரா வனிதா? பரபரப்பான புகைப்படம்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது திருமணம் குறித்த செய்தியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அவரது திருமண செய்திதான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது என்பதும் காவல் நிலையத்திலும் அவரது புகாரால் பரபரபபி ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பாஜகவில் சேர இருப்பதாக வதந்திகள் எழுந்து வருகிறது. ஆனால் அதனை வனிதா மறுத்துள்ளார். பாஜகவில் சேர்வதாக இருந்தால் அதை முன்கூட்டியே நான் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்தே கமல்ஹாசனின் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா விஜயகுமார் பதிவு செய்துள்ளார். குறிப்பாக அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவரது இரண்டு கைகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார்

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வேண்டுமானால் எத்தனையோ புகைப்படங்களை அவர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் உள்ள புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளதால் அவர் ஒருவேளை கமல் கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதா? என்ற வதந்தி தற்போது எழுந்து வருகிறது 

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறியுள்ள வனிதா, ‘கமல்ஹாசன் ஒருவரே அந்த நாற்காலியில் உட்கார தகுதியானவர் என்றும் அவரது உடல் நலத்திற்காக நான் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் என்றும் அவரது அரசியல் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து வனிதா, கமல்ஹசன் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றது

From around the web