’வாடிவாசல்’ சூர்யா கெட்டப் இதுதானா? வைரலாகும் புகைப்படம்

 

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் முடிந்து விட்டதாகவும் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே சூர்யா எந்த புகைப்படத்திலும் சிக்காமல் ’வாடிவாசல்’ படத்திற்கான கெட்டப்பை ரகசியமாக காத்து வருகிறார். ஆனால் அதையும் மீறி இணையதளத்தில் அவருடைய ’வாடிவாசல்’ கெட்டப் கசிந்துவிட்டது

நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான தாடியும் வைத்து சூர்யா தோன்றும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த கெட்டப்பில் தான் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் 

தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்க இருக்கிறார் என்பதும் அதுவும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்திய கதை என்பதாலும் ’வாடிவாசல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web