’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழா?

 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகத்தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே 

தற்போது திரையரங்குகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

master censor

மேலும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த  படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சென்சார் தகவல் குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களாக வதந்திகள் வெளிவந்த நிலையில் தற்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web