இதனால் தான் சுரேஷ் வெளியேற்றப்பட்டாரா? அதிர்ச்சி தகவல்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான நாள் முதல் மிகப் பிரமாதமாக பெர்மார்ம் செய்து கொண்டிருந்த போட்டியாளர்கள் சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக எவிக்ஷன் பாஸ் விவகாரத்தில் அவர் செய்த தந்திரம் ரம்யாவை தவிர வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை இருக்கும் போட்டியாளர் என அனைத்து பார்வையாளர்களும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று அவர் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது 

suresh

கமல்ஹாசன் கூட இந்த எவிக்சன் குறித்து ’ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கம்தான் என்றும், சுரேஷ் சக்கரவர்த்தியை நான் வெளியே அனுப்பவில்லை நானாக அனுப்பினேன் என்று நம்பாதீர்கள் என்றும், அவர் வெளியே செல்வதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம் அல்லது சுரேஷ் ஆகவும் இருக்கலாம், அது என்ன என்று விவாதம் செய்யுங்கள்’ என்று தான் கூறினார் 

எனவே சுரேஷின் வெளியேற்றத்திற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சுரேஷ் நடத்திவந்த ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சிக்காக தான் சுரேஷ் வேண்டுமென்றே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற செய்தி தற்போது பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web