கவுதம் மேனனின் கிராமத்து படம் இந்த கதையா? ரசிகர்கள் ஆச்சரியம்!

 

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் கிராமத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

கடந்த 1994ஆம் ஆண்டு நெப்போலியன் நடித்த ’சீவலப்பேரி பாண்டி’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே, இந்த சீவலப்பேரி பாண்டி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தான் கவுதம்மேனன் இயக்க இருப்பதாகவும் இதற்காக அவர் நேரடியாக நெல்லை சென்று அங்கு சீவலப்பேரி பாண்டி குறித்த தகவல்களை திரட்டி திரைக்கதை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

திரைக்கதையை முழுமையாக முடித்த பின்னரே அந்த கேரக்டரில் நடிக்கும் நடிகரை கௌதம் மேனன் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. முதன்முதலாக கௌதம் மேனன் கிராமத்து கதை ஒன்றில் களமிறங்கி உள்ளதால் முழுமையாக ஆராய்ந்து முழு கவனத்துடன் திரைக்கதை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படம் நிச்சயம் சீவலப்பேரி பாண்டியன் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

From around the web