ஏஆர் முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்தின் கதை இதுதானா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

தளபதி விஜய் நடிக்க இருந்த தளபதி 65 திரைப்படத்தை முதலில் இயக்க இருந்தவர் ஏஆர் முருகதாஸ் என்பதும் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஏஆர் முருகதாஸ் ஒரு கதை கூறியிருப்பதாகவும் அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து விட்டதால் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஏஆர் முருகதாஸ் கூறிய கதை தளபதி விஜய்க்காக தயாரான கதை என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் இன்னொரு பக்கத்தில் யார்க்கர் புகழ் நடராஜனின் வாழ்க்கை வரலாறு கதை என்றும் கூறப்படுகிறது
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அதை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கினால் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று கோலிவுட் திரையுலகில் கூறப்படுவதால் இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்