ஆரி, அனிதா சண்டைக்கும் இதுதான் காரணமா? கசிந்த வீடியோ

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் அனிதாவின் தாய் தந்தை மற்றும் கணவர் குறித்து ஆரி ஏதோ சொல்ல முற்படுகையில் அனிதா அவரை தடுத்து நிறுத்தி ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

அனிதாவுக்கு இவ்வளவு கோபம் வருமா என்று பார்வையாளர்களே பெரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிலையில் அனிதா குறித்து ஆரி பேசியதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது வீடியோ ஒன்று கசிந்துள்ளது 

anitha

அந்த வீடியோவில் அர்ச்சனாவிடம் அனிதா அழுதுகொண்டே ’என்னுடைய அப்பா அம்மா ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் சண்டை போடக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் இப்போது நான் வெளியே சென்றால் அவர்களை என்னை திட்டுவார்கள், என்னுடைய பிரபாவும் என்னை திட்டுவான் என்று கூறி அழுது கொண்டு இருந்தார், அவருக்கு அர்ச்சனா ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் 

இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் ஷிவானியின் கேள்விக்கு ஆரி பதில் சொல்ல வந்தார் என்பதும் ஆனால் அவர் சொல்வது என்ன என்று முழுவதும் கேட்காமலேயே அனிதா அவரை தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சண்டைக்கு காரணமான வீடியோவை இதோ பாருங்கள்

From around the web