ஷில்பா ஷெட்டி கணவர் கைதுக்கு இதுதான் காரணமா?

 
raj gundra

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் நேற்று நள்ளிரவில் திடீரென மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ’மிஸ்டர் ரோமியோ’ ’குஷி’ உள்பட ஒரு சில படங்களிலும் பாலிவுட்டில் பல திரைப்படங்களிலும் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மேலும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் ராஜஸ்தான் அணியில் பங்குதாரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ராஜ் குந்த்ரா நேற்று நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டார். 

ஆபாச திரைப்படங்கள் எடுத்து பிரிட்டனைச் சேர்ந்த செயலி நிறுவனம் ஒன்றுக்கு ராஜ் குந்த்ரா விற்பனை செய்ததாகவும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உமேஷ் என்பவர்  ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

ஆபாச திரைப்படங்கள் எடுத்து செயலியில் ஒளிபரப்பி கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும் குறிப்பாக சந்தா வசூலிக்கும் செயல்களுக்கு மட்டுமே ஆபாச படங்களை  ராஜ் குந்த்ரா விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்த ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவர்  ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோடிகளில் மிதக்கும் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் ஆபாச திரைப்படங்கள் எடுத்து சம்பாதித்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web