’மாஸ்டர்’ மாளவிகாவின் தீபாவளி டிரெஸ் இதுதானா?

 
’மாஸ்டர்’ மாளவிகாவின் தீபாவளி டிரெஸ் இதுதானா?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு ஏற்கனவே மூன்று படங்கள் கமிட் ஆகி உள்ளது என்பதும் அவற்றில் ஒன்று தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதுமட்டுமின்றி இன்னும் இரண்டு முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளியை அடுத்து அவர் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார் 

malavika mohanan

அவருக்கு பிடித்த பிங்க் கலரில் உடை அணிந்த நிலையில் இந்த உடைதான் அவரது தீபாவளி உடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீஸர் நாளை வெளிவரவிருக்கும் நிலையில் இந்த டீசரில் மாளவிகா மோகனன் காட்சிகள் இல்லை என்றும் அடுத்து வெளியாகும் டிரெய்லரில் தான் அவரது காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web