‘வேற லெவல்’: இதுதான் விஜய் பட டைட்டிலா?

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் ‘வேற லெவல்’ என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்று கூறியதோடு போட்டோஷாப் மூலம் படத்தின் டைட்டில் போஸ்டரையும் அடித்து இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இன்னொரு விஜய் ரசிகர் ஒரு போஸ்டரை தயார் செய்துள்ளார். அதில் ‘இது டைட்டில் இல்லடா’ என்பது தான் டைட்டில் என்பது
 

‘வேற லெவல்’: இதுதான் விஜய் பட டைட்டிலா?

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் ‘வேற லெவல்’ என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்று கூறியதோடு போட்டோஷாப் மூலம் படத்தின் டைட்டில் போஸ்டரையும் அடித்து இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இன்னொரு விஜய் ரசிகர் ஒரு போஸ்டரை தயார் செய்துள்ளார். அதில் ‘இது டைட்டில் இல்லடா’ என்பது தான் டைட்டில் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

‘வேற லெவல்’: இதுதான் விஜய் பட டைட்டிலா?ஆனால் உண்மையில் என்ன டைட்டில் என்பது ஒருசிலர் பத்திரிகையாளர்களுக்கு தெரிந்துவிட்டது என்பதும் ஆனால் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்காக அவர்கள் ரகசியம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே உண்மையான டைட்டில் என்ன என்பதை தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் இன்று மாலை 6 மணி வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web