ஷிவானியை இப்படியா திட்டுவது? வறுத்தெடுத்த சின்மயி

 

பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்த ஷிவானியின் அம்மா அவரை கடுமையாக திட்டினார் என்பதும் நீ என்ன காரணத்துக்காக இந்த வீட்டில் வந்தாய்? அதை மறந்துவிட்டு பாலாஜியுடன் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று திட்டினார் என்பதும் தெரிந்தது 

இந்த நிலையில் ஷிவானி அம்மாவின் இந்த செயலுக்கு பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு 19 வயது பெண்ணுக்கு தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத் தான் செய்வார். உடனே அதனை குறை சொல்வது அதுவும் கோடிக்கணக்கானோர் பார்த்து வரும் ஒரு ரியாலிட்டி ஷோவில் குறை சொல்வது என்பது தகாத செயல் என்று கண்டித்துள்ளார் 

chinmayi

மேலும் மேக்-கப் போட்டாலே விலைமாது என்று அளவிற்கு பேசும் பெற்றோர்கள் இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள் என்றும் தயவுசெய்து பெற்றோர்கள் தங்களுடைய மகள்களை புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

அதேபோல் அனிதாவின் தந்தை சமீபத்தில் இறந்த போது சமூகவலைதளத்தில் பதிவான கருத்துக்களும் தனக்கு உடன்பாடில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்


 

From around the web