இது பிக்பாஸ் புரமோவா? அரசியல் புரமோவா? ஆண்டவருக்கே வெளிச்சம்

 
இது பிக்பாஸ் புரமோவா? அரசியல் புரமோவா? ஆண்டவருக்கே வெளிச்சம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 4 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அவர்கள் அவ்வப்போது தனது சொந்த புராணத்தையும் சொந்தக்கதை சோகக்கதையை கூறி வருவது பார்வையாளர்களுக்கு சில சமயம் சுவாரசியமாக இருந்தாலும் பல சமயம் எரிச்சலாகவும் இருப்பது உண்டு

குறிப்பாக கமல்ஹாசன் தன்னைப் பற்றி தானே பெருமையாகப் பேசிக் கொள்வது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனது கட்சியை பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது 


இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோ வீடியோவில் கமல்ஹாசன் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளார். மணிக்கூண்டு டாஸ்க்கில் பாலாஜி தூங்கியதை குறிப்பிடும் வகையில் ’நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று கூறுவது மட்டுமன்றி ஓட்டு போடும் பொது மக்களுக்கும் சேர்த்து தான் என்று கூறப்பட்டதாக புரிந்து கொள்ள முடிகிறது

எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது அரசியலை புகுத்தி வரும் கமலஹாசன் இதனை தேர்தல் வரை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web