நடிகர் வையாபுரியா இது? அடையாளமே தெரியவில்லையே!

 

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான வையாபுரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் கோலிவுட் திரையுலகில் அவருக்கு அவருக்கு எந்தவித வாய்ப்பும் பிக்பாஸால் கிடைக்கவில்லை

இந்த நிலையில் சற்றே வருத்தத்துடன் இருந்த அவர் தற்போது ஒரு வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் வையாபுரியா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் உள்ளன. இந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அவருக்கு திரையுலகில் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது

vaipuri

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விக்ரம் படத்தில் வரும் ஒரு சின்ன கேரக்டரில் வையாபுரி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி மேலும் 2 படத்தில் அவர் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் அவருக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web