நான் அறிமுகம் செய்த ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமையா? கண்ணீர்விட்ட பாரதிராஜா

 

பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கிய படங்களில் ஒன்று ’என்னுயிர் தோழன்’. இந்த படத்தில் நாயகனாக அறிமுகமான பாபு என்ற நடிகர் அதன்பின் ஓரிரு படங்களில் மட்டும் நடித்தார் என்பதும் அதனை அடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ’என்னுயிர் தோழன்’ பாபு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால் அவர் திரையுலகினரின் உதவியை நாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது 

bharathiraja

இந்த நிலையில் பாபுவின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்ததும் அவரை நேரில் சென்று பார்த்த பாரதிராஜாவிடம் பாபு கண்ணீர் விட்டு அழுததும், நான் அறிமுகம் செய்த ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலையா என பாரதிராஜாவும் கண்கலங்கி உள்ளதும் வீடியோ ஒன்றில் தெரிய வந்துள்ளது

இதனை அடுத்து பாபுவுக்கு தகுந்த உதவிகள் ஏற்பாடு செய்வதாக பாரதிராஜா உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பாபுவுக்கு உதவ விரும்புபவர்கள் அவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பலாம் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அவரது வங்கி கணக்கிற்கு ஏராளமானோர் பணம் அனுப்பி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன


 

From around the web