நாமினேஷனில் இப்படி ஒரு திருப்பமா? கேப்டன் ரியோ கடும் அதிர்ச்சி!


 

 

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே நாமினேசன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று நாமினேஷன் தொடங்கியபோது அனைத்து போட்டியாளர்களும் இருவரை நாமினேஷன் செய்து அதற்கான காரணத்தைக் கூறினார் 

பெரும்பாலும் ஆரி மற்றும் பாலாஜியை நாமினேட் செய்தனர் என்பதும் ரம்யாவும் நாமினேஷனில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரியோ இந்த வார கேப்டனாக இருந்தாலும் இது கடைசி வார நாமினேஷன் என்பதால் கேப்டன் ரியோவையும் நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் கூறியதை அடுத்து ரியோவும் நாமினேஷன் செய்யப்பட்டார்

biggboss

இந்த நிலையில் நாமினேஷன் படலம் முடிந்ததும் பிக்பாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த வாரம் கடைசி நாமினேசன் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் நாமினேசன் செய்யப்படுவதாகவும் நாமினேஷன் படலமே ஒரு பார்மாலிட்டிக்காக நடத்தப்பட்டது என்றும் கூறியதை அடுத்து ரியோ உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே இந்த வாரம் அனைத்து ஏழு போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில் வெற்றி பெறும் ஒருவர் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார் என்பது மட்டுமன்றி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த டாஸ்க்கில் மிகவும் குறைவாக மதிப்பெண் எடுத்த ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web