ஹேமந்தை கைது செய்ய ஒரே ஒரு போன்கால் தான் காரணமா? சித்ரா வழக்கில் திருப்பம்!

 

சின்னத்திரை நடிகை சித்ரா கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டதற்கு ஒரே ஒரு போன்கால் தான் காரணம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கணவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சித்ரா மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனை அடுத்து அவர் தனது ஆதங்கத்தை ஹேமந்த் தந்தையிடம் அதாவது தனது மாமனாரிடம் தற்கொலைக்கு சில நிமிடங்களுக்கு முன் பேசியதாகவும் தெரிகிறது

chithra hemanth

ஆனால் சித்ரா தற்கொலைக்கு முன் பேசியது உள்பட பல டேட்டாக்களை அவரது மொபைல் போனில் அழித்து விட்டதாகவும் இதனை அடுத்து அந்த டேட்டாக்களை போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் மீட்டபோது சித்ராவின் ஆடியோ பதிவுகள் சில கிடைத்ததாகவும் அதில் ஹேமந்த் தந்தையுடன் சித்ரா பேசிய ஆடிய பதிவு உள்பட ஒருசில முக்கிய ஆதாரங்கள் இருந்ததால்தான் ஹேமந்த் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 

இந்த ஆடியோவில் பதிவில் உள்ள ஹேமந்தின் கடுமையான வார்த்தைகள் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய வகையில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சித்ரா தனது மாமனாருடன் பேசிய ஒரே ஒரு போன்கால் தான் ஹேமந்த் கைது செய்யப்பட காரணம் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஒரு சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

From around the web