விஜய்யுடன் சுமூக உறவு இல்லையா? எஸ்.ஏ.சி விளக்கம்!

 

விஜய்க்கும் எனக்குமான சுமுக உறவு பற்றி கற்பனையாக சிலர் கூறுவதற்கு நான் விளக்கம் தர முடியாது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக துவங்கிய இந்த அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் அரசியல் கட்சியைப் பதிவு செய்துள்ளேன். இது விஜய்யின் பெயரில் புதிதாக தொடங்கப்பட்டது கிடையாது.​ ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளோம் 

கட்சி துவங்க இப்போது என்ன அவசியம் வந்தது, யாருக்காக இந்த கட்சி என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. என்னுடைய ரசிகர்கள் யாரும் கட்சியில் சேர வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். நல்லதை நினைத்து ஆரம்பித்தேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்

From around the web