கடவுள் இருக்கானா குமாரு: அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிக்பாஸ்

கடந்த வாரம் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் காப்பாற்றப்பட்டவர்களின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தபோது முதல் பெயராக அவர் அறிவித்தது ஆரி என்பது குறிப்பிடத்தக்கது. அரை காப்பாற்றப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் அர்ச்சனாவின் முகம் சுருங்கியது என்பதும் கமல்ஹாசன் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அவர் சக போட்டியாளர்களிடம் கடவுள் இருக்கானா குமாரு என்று ஆரி காப்பாற்றப்பட்டது குறித்து வெறுப்புடன் பேசினார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக பாலாஜி, ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய மூவரிடமும் அடுத்தடுத்து கடவுள் இருக்கானா குமாரு என்று கேட்டதும் பார்வையாளர்களை வெறுப்புக் உள்ளாக்கியது
இந்த நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா கேட்ட இந்த கேள்விக்கும் பதில் பிக்பாஸ் இந்த வாரம் கொடுத்துள்ளார். கடந்த வாரம் காப்பாற்றப்பட்ட ஆரி நடித்த பகவான் என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று பிக்பாஸ் வீட்டிலேயே வெளியானது. கடவுள் இருக்கானா குமாரு என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கு பகவான் என்ற படத்தின் டைட்டிலை பிக்பாஸ் வீட்டிலேயே வெளியிட்டு கடவுள் இருக்கான் குமாரு என்று அர்ச்சனாவுக்கு பதிலடி பிக்பாஸ் பதிலடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியின் பகவான் மோஷன் போஸ்டரை வெளியானதும் சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஒரு வித்தியாசமான படம் என்று எனது திரையுலக வாழ்க்கையில் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்று ஆரி இந்த படம் குறித்து கருத்துக் கூறினார். இந்த படத்தை காளிங்கன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது