பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல ஆர்ஜே அர்ச்சனா உண்டா? இல்லையா? குழப்பும் புகைப்படங்கள் 

 

பிரபல ஆர்ஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென அவர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் தான் தன்னுடைய குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் 

இதனையடுத்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ரசிகர்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே இந்த புகைப்படத்தை பதிவு செய்ய வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்ஜே அர்ச்சனா உண்டா இல்லையா என்பது இன்று மாலை 6 மணிக்கு தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு கிடைத்த தகவலின்படி ஆர்ஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

Holiday mode with family :-)

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on

From around the web