பிக்பாஸ் 4’ முதல் நாள் படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? ஆச்சரிய தகவல்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

முதல் நாளில் அனைத்து போட்டியாளர்களும் அறிமுகம் செய்யப்படும் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் அறிமுகப்படுத்தப்பட்டனர் என்றும், இந்த முறை நடன நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றதாகவும் தெரிகிறது

மேலும் போட்டியாளர்கள் அறிமுகம் முடிந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவலாக இருந்தாலும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் இன்னும் கசியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அக்டோபர் 4ஆம் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web