பிரபல குணசித்திர நடிகரும் பிக்பாஸ் போட்டியாளரா?

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் கடந்த நான்கு வருடங்களாக இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 5 வது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருகிறது 

ms baskar

ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிகான், ராதாரவி ஆகியோர்கள் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் கனி, பவித்ரா, சுனிதா மற்றும் ஆர்ஜேக்கள் இனியன், வினோத் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழ் திரைப்பட குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் மூத்த நடிகர் ஒருவர் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் இந்த சீசனில் எம்எஸ் பாஸ்கர் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web