சுரேஷ் தாத்தா இந்த வாரம் வெளியேறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுரேஷ் தாத்தா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிக்பாஸ் வீட்டில் கடினமான போட்டியாளர் என்று ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளப்பட்டவர் சுரேஷ். குறிப்பாக எவிக்சன் பாஸ் பெறும் டாஸ்க்கில் இவர் விளையாட விதத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதன் பிறகுதான் அவருக்கு ஆர்மிகளும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வந்த பிறகு, சுரேஷ் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். ஒரு கட்டத்தில் அவர் இருக்கும்  இடமே தெரியாமல் போனது

இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் சுரேஷின் பெர்மார்மன்ஸ் சரியில்லை என்பதால் அவருக்கும் குறைவான வாக்குகள் விழுந்து இருப்பதாகவும் இதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சிலர் சுரேஷ் சீக்ரெட் அறைக்கு அழைக்கப்படுவார் என்றும் மீண்டும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்றும் கூறப்படுகிறது 

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகமாக கண்டெண்ட் கொடுத்து வந்த சுரேஷ் தாத்தா வெளியேற இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியால் பிக்பாஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுரேஷ் தாத்தா கடைசி வரையில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்றே அனைவராலும் கணிக்கப்பட்டது

From around the web