’சூரரை போற்று’ பொம்மி, ரஜினியுடன் நடித்த குழந்தை நட்சத்திரமா? வைரல் புகைப்படம்!

 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது ஏற்கனவே அறிந்ததே 

இந்த படத்தில் சூர்யாவின் நடிப்புக்கும், சுதாவின் திரைக்கதைக்கும் பாராட்டுக்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு இணையாக நடித்திருந்த நாயகி அபர்ணா முரளிக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

aparna

பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே நாயகிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் அபர்ணாவின் கேரக்டர் கதையுடன் ஒத்து இருந்தது அவருடைய நடிப்பும் பளிச்சிடும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பொம்மி என்ற கேரக்டரில் நடித்து இருந்த அபர்ணாமுரளி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தான் என்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது 

ஆனால் இதுகுறித்து அபர்ணா தரப்பினர் விளக்கமளித்தபோது, அவர் குழந்தை நட்சத்திரமாக சந்திரமுகி படத்தில் நடித்தவர் இல்லை என்றும் அது வேறு நபர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னர் ’8 தோட்டாக்கள்’ என்ற படத்திலும் ’சர்வம் தாள மயம்’ என்ற படத்திலும் அபர்ணாமுரளி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web