முதல் வாரமே வெளியேறுகிறாரா ஷிவானி? ஆர்மியினர் அதிர்ச்சி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் ஒரு வாரம் முழுமையாக முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் இன்று முதல் நாமினேஷன் படலம் தொடங்குகிறது 
இன்றைய நாமினேஷன் படலத்தில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத இருவரை நாமினேஷன் செய்து வருகின்றனர். பெரும்பாலானோரும் ஷிவானி மற்றும் சனம்ஷெட்டியை நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் சுரேஷ் மற்றும் ஆஜித்தை நாமினேஷன் செய்துள்ளனர் 

இந்த நிலையில் ஷிவானி மற்றும் சனம்ஷெட்டி இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. முதல் வாரமே வெளியேறப் போவது இவர்கள் இருவரில் ஒருவர்தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கிய நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை மௌன சாமியாராக இருந்து வருகிறார். அதற்கு நேர்மாறாக இருக்கும் சனம்ஷெட்டி ஓவர் ஆக்டிங் செய்வதால் போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்

அதேபோல் ஆஜித் பேசாமல் இருப்பதாலும் அளவுக்கு அதிகமாக சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதாலும் இவர்கள் இருவரும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வாரமே ஒருவேளை ஷிவானி வெளியேறினால் அவரது ஆர்மியினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web