சாயிஷா கர்ப்பமா? தகவலை உறுதிப்படுத்திய சாயிஷாவின் தாயார்!!

நடிகை சாயிஷா வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார், முதல் படத்திலேயே தன்னுடைய அப்பாவித்தனமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தார். அடுத்து இவர் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா படத்திலும், கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்து இருப்பார்.
அடுத்து தன்னுடைய காதல் கணவரான ஆர்யாவுக்கு ஜோடியாக, கஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை, காதல் இரண்டையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில்தான் இவருக்கும் நடிகர் ஆர்யாவிற்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு நோ என்பதுபோல் முரட்டு சிங்கிளாக சுற்றிவந்த ஆர்யாவுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களது திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பின்னரும் சாயிஷா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருவதோடு, சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், ஆர்யா- சாயிஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சாயிஷாவின் குக்கிங்க் வீடியோ, டான்ஸ் வீடியோ, டிக் டாக் வீடியோ, ஆர்யா- சாயிஷா ரொமான்ஸ் வீடியோ என ஜாலியாக இருந்துவரும் சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களாகவே செய்திகள் வெளியானதை அடுத்து அவரது தாயிடம் கேட்க, அவர் இதனை பொய்யான செய்தி என்று மறுத்துள்ளார்.