ஏஆர் முருகதாஸ் விலகியதற்கு ரூபாய் 25 கோடி சம்பளம் தான் காரணமா? பரபரப்பு தகவல் 

 

தளபதி விஜய் நடிக்க இருந்த ’தளபதி 65’ படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் விலகி விட்டதாக கூறப்பட்டது. இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தற்போது முருகதாஸின் 25 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து குறைத்துக்கொள்ள கேட்கப்பட்டதாகவும் அதனால்தான் அவர் படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இந்த தகவலை ஏஆர் முருகதாஸ் தரப்பினர் மறுத்துள்ளனர். சம்பளத்தில் பிரச்சனை இருந்து இருந்தால் இத்தனை மாதங்கள் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் எப்படி நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்

இதுகுறித்து கோலிவுட் வட்டாரங்களில் கூறியபோது ஏஆர் முருகதாசுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என ஜனவரி மாதம் உறுதி செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் கொரோனா பரவலுக்கு பின்னர் அனைத்து படங்களையும் பட்ஜெட்டிலும் குறைக்கப்பட்டு வந்ததை அடுத்து விஜய் மற்றும் முருகதாஸ் சம்பளத்தை குறைக்க தயாரிப்பு தரப்பில் கோரிக்கை விடுத்தது என்றும், இந்த கோரிக்கையை விஜய் ஏற்றுக் கொண்டாலும் ஏஆர் முருகதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால்தான் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் விலகியதை அடுத்து ’தளபதி 65’ படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று தெரிகிறது

From around the web