நடராஜனை வைத்து பிரமோஷன் செய்கிறாரா ஆர்ஜே பாலாஜி? மூக்குத்தி அம்மன் வீடியோ

 

யார்க்கர் மன்னன் நடராஜன் சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்வு பெற்றார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் திடீரென அவர் ’மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு புரமோஷன் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் 

ஆர்ஜே பாலாஜி அவர்களின் கமெண்டரி தனக்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய ஊர் மக்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்றும், அதனால் அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார் 

’மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலையே பயன்படுத்திக்கொண்ட ஆர்ஜே பாலாஜியின் புரமோஷன் திட்டங்களில் ஒன்று தான் நடராஜனை வளைத்துப் போட்டது என நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web