ரியோவுக்கு மட்டும் தான் இன்ப அதிர்ச்சியா? இன்று ஆரிக்கும்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரியோ நடித்த ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தின் வீடியோ பாடல் ஒன்று சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

பிக்பாஸ் போட்டியாளர்களும் ரியோ ரசிகர்களும் இந்த பாடலை கண்டு களித்தனர் என்பதும் ரியோவின் அட்டகாசமான டான்ஸ்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றே கூறலாம் 

இந்த நிலையில் ரியோவுக்கு மட்டும்தான் இன்ப அதிர்ச்சியா? இன்று ஆரிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியை பிக்பாஸ் வைத்துள்ளார். அதுதான் ஆரி நடித்த 11வது திரைப்படம் ஒன்றின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது. ஆரி ஏற்கனவே 11 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இன்று ஆரி நடித்த  12ஆவது திரைப்படத்தின் டைட்டில் லுக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது 

இந்த போஸ்டர் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோஷன் போஸ்டர் ஆரிக்கும் ஆரியின் ரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரி நடித்த 12வது திரைப்படத்தின் டைட்டில் என்ன? மோஷன் போஸ்டர் எப்படி இருக்கும்? என்பதை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்து கொள்வோம்

From around the web