திடீரென பொதுச்சேவையை நிறுத்த முடிவு செய்துவிட்டாரா ராகவா லாரன்ஸ்? அதிர்ச்சி தகவல்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கோடிக்கணக்கில் நிதி உதவிகளையும் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் கேரளா உள்பட பல மாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அவர் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் திடீரென பொது சேவையை நிறுத்தும்படி அவரது தாயார் மற்றும் நண்பர்கள் கூறியதாக அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் டாஸ்மாக் திறந்துவிட்டதால் குடிகாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுக்களை
 
ragawa
திடீரென பொதுச்சேவையை நிறுத்த முடிவு செய்துவிட்டாரா ராகவா லாரன்ஸ்? அதிர்ச்சி தகவல்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கோடிக்கணக்கில் நிதி உதவிகளையும் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் கேரளா உள்பட பல மாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென பொது சேவையை நிறுத்தும்படி அவரது தாயார் மற்றும் நண்பர்கள் கூறியதாக அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் டாஸ்மாக் திறந்துவிட்டதால் குடிகாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுக்களை வாங்கி குடித்து வருவதால் இவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமா? என்று தனது தாயார் உட்பட பலர் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் ஒருசில குடிகாரர்களால் பொது சேவையை நிறுத்தினால் அவருடைய குடும்பத்தினரும் மற்றவர்களும் பசியால் வாடுவார்கல் என்பதால் இந்த சேவையை தொடர முடிவு செய்திருப்பதாகவும் என்று கூறியுள்ளார். மேலும் குடிகாரர்கள் குடிக்கும் முன்னர் தாங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அழுவதை சற்று நினைத்துப் பாருங்கள் என்றும் அவர் கனிவுடன் கேட்டுக் கொண்டுள்ளார்

From around the web