ஹரிஷ் கல்யாணை காதலிக்கிறாரா பிரியா பவானி சங்கர்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

 

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் பிரியா பவானிசங்கர் ஏற்கனவே இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யாவை காதலிப்பதாக வதந்திகள் வந்தது. இந்த வதந்தியை இரு தரப்பினருக்கும் மறுத்த நிலையில் பிரியாபவானி சங்கர் தனது கல்லூரி கால நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் 

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் உடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் ’அமெரிக்காவில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் ப்ரியாபவானி சங்கர் தனது டுவிட்டரில் லாக்டவுன் முடியும் வரை பொறுமை காக்க முடியாதா? இதை நான் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் இதனை அடுத்து நெட்டிசன்கள் மற்றும் டிவிட்டர் பயனாளிகள் இருவரும் காதலித்து வருவதாக பகிர்ந்து வருகின்றனர் 

ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் சூப்பர் ஹிட் தெலுங்கு படமொன்றின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றனர் என்பதும் அந்த படத்தை புரமோஷன் செய்வதற்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது


 

From around the web