’மாஸ்டர்’ படத்தில் பார்வையில்லாத மாற்றுத் திறனாளியா? விஜய் கேரக்டர் லீக்

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் அவர் பார்வையில்லாத மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விஜய் இதுவரை பார்வையில்லாத மாற்றுத் திறனாளி உள்பட எந்த மாற்றுத்திறனாளி கேரக்டரிலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் அவர் இரவில் மட்டும் பார்வை தெரியாது என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிற.து அதனால் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்பட அனைத்து போஸ்டர்களிலும் அவர் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து இருந்தார் என்றும் பார்வையற்ற பள்ளியிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 

master

முன்னதாக இந்த படத்தில் அவர் ஒரு குடிகார பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்பட்டது அவ்வாறு குடித்ததனால்தான் அவருடைய கேரக்டருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாகவும் எனவே பகலில் நன்றாக கண் தெரியும் அவருக்கு இரவில் மட்டும் கண் பார்வை சரியாக தெரியாது என்றும் அதனால் அவருடைய எதிரிகள் அவரை இரவில் போட்டுத்தள்ள முயற்சிப்பதும், அதை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

விஜய்யின் கேரக்டருக்கு இணையான கேரக்டராக விஜய்சேதுபதி கேரக்டர் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு கட்டத்தில் விஜய்யின் நடிப்பை அவர் தூக்கி சாப்பிடும் அளவுக்கு காட்சிகளும் உண்டு என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

மொத்தத்தில் ’மாஸ்டர்’ வரும் தீபாவளியன்று டீசர் விருந்தையும் பொங்கலன்று திரைப்பட விருந்தையும் அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web