தனுஷ் தம்பிக்கும் சிம்பு நாயகிக்கும் காதலா?

‘வேலையில்ல்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷியும், சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகி மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருவருமே மறுத்துள்ளனர். இதுகுறித்து மஞ்சிமா பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க
 
manjima mohan

தனுஷ் தம்பிக்கும் சிம்பு நாயகிக்கும் காதலா?

‘வேலையில்ல்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷியும், சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகி மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருவருமே மறுத்துள்ளனர்.

இதுகுறித்து மஞ்சிமா பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்’ என்று கூறி இருக்கிறார். மேலும் இதுவரை யாரும் தன்னை காதலிப்பதாக நேரில் வந்து கூறவே இல்லை. அப்படியே கூறினாலும் தனக்கு முதல் பார்வையில் காதல் என்பதில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

தனுஷ் தம்பிக்கும் சிம்பு நாயகிக்கும் காதலா?‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை அடுத்து மஞ்சிமா மோகன் தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முத்தையா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

From around the web