விமல் நடித்த மஞ்சப்பை இரண்டாம் பாகமாக உருவாகிறதா?

 

விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடிப்பில் ராகவன் என்பவர் இயக்கி இருந்த மஞ்சப்பை என்ற திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக ராஜ்கிரன் நடித்திருக்கும் மிகச் சிறந்த பாராட்டு குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் அவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

manjaipai

ஆனால் இதுகுறித்து இராகவன் தரப்பினர் கருத்து கூறும்போது மஞ்சப்பை படத்தின் இரண்டாம் பாகம் இயக்க திட்டமிடப்பட்டிருப்பது உண்மைதான் ஆனால் அது இப்போதைக்கு தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் காலம் நேரம் கூடி வரும் போதுதான் அந்த படம் உருவாகும் என்றும் கூறினார்

மேலும் மஞ்சப்பை படத்தை நானே தயாரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியையும் ராகவன் மறுத்துள்ளதாக தெரிகிறது  ஏற்கனவே பல சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே தோல்வி அடைந்த நிலையில் மஞ்சப்பை திரைப்படத்தை இரண்டாம் பாகம் தயாரிக்க ராகவன் தயாராக இல்லை என்பதே தற்போதைய உண்மை என்பது குறிப்பிடத்தக்கது  

From around the web