’கார்த்தியின் ’சுல்தான்’ மகாபாரத கதையா? அட்டகாசமான டீசர்!

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் மகாபாரத கதையில் இருந்து உருவாக்கப்பட்டது போல் இன்று வெளியாகியுள்ள டீசரில் இருந்து தெரியவருகிறது
மகாபாரதத்தில் கிருஷ்ணர் கௌரவர்களுக்கு 100 வாய்ப்புகள் கொடுத்தும் அதை அவர்கள் பயன்படுத்தவில்லை என்று வில்லன் பேசும் வசனமும் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு பதிலாக கௌரவர்களுக்கும் கிருஷ்ணர் ஆதரவு கொடுத்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பாருங்கள் என்று கார்த்தி பேசும் வசனமும் மாறி மாறி இடம் பெறுவதை அடுத்து இந்த திரைப்படம் மகாபாரத கதையில் உள்ள ஒரு சில பகுதிகளை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது
மேலும் கார்த்தியின் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் அதிரடியாக இருக்கிறது என்பதும் குறிப்பாக அவர் சாட்டையை சுழற்றும் ஸ்டைலே தனி என்றும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பதும் இந்த படம் ரிலீசான பின்னர் அவருக்கு மிகப்பெரிய வகையில் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர்ஹிட் படமான ரெமோ என்ற படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது