நாயகன், வில்லன் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாரா கார்த்தி? பரபரப்பு தகவல்

விஷால் நடித்த ’இரும்புத்திரை’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ ஆகிய இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் 

 

விஷால் நடித்த ’இரும்புத்திரை’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ ஆகிய இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் 

இந்த படத்தின் திரைக்கதை தயாராகி விட்டதாகவும் விரைவில் படக்குழுவினர் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி முதல்முறையாக நாயகன் மற்றும் வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. ‘சிறுத்தை’ படத்தில் இரண்டு வேட்னக்களில் கார்த்தி நடித்திருந்தாலும் இதுவரை எந்த படத்திலும் வில்லனாக கார்த்தி நடிக்கவில்லை என்பதும், தற்போதுதான் முதன் முதலாக அவர் வில்லன் கேரக்டரை கையில் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது 

இதுவொரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தமிழ் சினிமா இப்படி ஒரு ஆக்சன் படத்தை பார்த்திராத வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

From around the web