அஜீத்தை முந்துகிறாரா கார்த்தி? 

 
அஜீத்தை முந்துகிறாரா கார்த்தி?

தல அஜித் படத்திற்கு முந்துவாரா கார்த்தி என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றது 

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கமிருக்க நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை  இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இயக்குனர் சுதா கொங்கரா அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கவனித்து வருகிறார் 

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஒரு படம் உருவாகி இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது அஜித் படத்தை முடித்துவிட்டுதான் கார்த்தி படத்தை  இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக அஜித் படத்திற்கு முன்னதாக கார்த்தி படம் உருவாக வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளிவந்தது 

sudha

ஆனால் அதே நேரத்தில் கார்த்திக்காக ஒரு கதையை  இயக்குனர் சுதா கொங்கரா உறுதி செய்து விட்டதாகவும் எனவே அந்த படம் அஜித் படத்தை முடித்தவுடன் இயக்குவது உறுதி என்று  இயக்குனர் சுதா கொங்கரா தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துள்ள சுதா கொங்கரா அடுத்ததாக அவரது சகோதரர் கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது 

From around the web