பாஜகவில் இணைகிறாரா கங்கனா ரனாவத்? மத்திய அமைச்சரின் திடீர் சந்திப்பால் பரபரப்பு 

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கங்கனா ரனாவத் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளிகொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

 

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கங்கனா ரனாவத் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளிகொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிராக கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரை மத்திய அமைச்சர் ஒருவர் கங்கனாவை நேரில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்பவர் சற்று முன்னர் கங்கனா ரனவத்தை அவர்கள் மும்பை வீட்டில் சந்தித்து உள்ளார். இருவரும் சில நிமிடங்கள் தனியாக பேசி உள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே, கங்கனா ரனாவத்துக்கு அரசியலில் விருப்பமில்லை என்றும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதுதான் ஆர்வத்தில் உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அவர் அரசியலில் ஈடுபடப் போவதாக இருந்தால் பாஜகவில் சேர விரும்பினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படும்ம் என்றும் அவர் தெரிவித்தார் 

மேலும் அவர் தனது அடுத்த படத்தில் தலித் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அந்த படம் நாடு முழுவதும் பெரும் புரட்சியை உருவாக்கும் என்று அவர் கூறியதாகவும் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கஙகனாவை மத்திய அமைச்சர் ஒருவர் நேரில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web