கமல்ஹாசன் ‘விக்ரம்’ ஹாலிவுட் காப்பியா? நெட்டிசன்கள் ஆதாரம்!

 

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் டைட்டில் டிரைலர் நேற்று வெளியானது என்பதும், இந்த படத்திற்கு ‘விக்ரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 

மேலும் இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டைட்டில் ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ஹாலிவுட் படம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்று அந்த படத்தின் ட்ரைலரில் இருக்கும் காட்சிகள் அப்படியே ‘விக்ரம்’ படத்தில் இருப்பதாகவும் நெட்டிசன்கள் ஆதாரத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவு செய்து வருகின்றனர்

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் ‘விக்ரம்’ திரைப்படமும் அதேபோல் காப்பியாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹாலிவுட் மட்டும் கொரியா படங்களில் இருந்து காப்பி அடித்து தமிழ் சினிமா தயாரிக்கப்படும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழ் சினிமா இயக்குனர்களின் கற்பனை வறட்சியை காட்டுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் என்ன பதிலளிக்கப் போகின்றார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web